பதிவு:2022-09-21 09:48:18
திருவள்ளூரில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் கூட்டம்
திருவள்ளூர் செப் 21 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதிய மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையீட்டு மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு, உடனடி தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதியம்,குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 30 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து இவ்வோய்வூதிய குறை தீக்கும் கூட்டத்தில் ஒரு பயனாளிக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50,000-த்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் ஓய்வூதிய இயக்கக இயக்குநர் டி.ஸ்ரீதர், துணை இயக்குநர் கே.மதிவாணன், மாவட்ட கருவூல அலுவலர் வித்யா கௌரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) பி.எஸ்.சத்திய குமாரி, ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.