திருவள்ளூர் அடுத்த பூண்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 80 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்

பதிவு:2022-09-21 09:51:10



திருவள்ளூர் அடுத்த பூண்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 80 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்

திருவள்ளூர் அடுத்த பூண்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 80 மாணவிகளுக்கு விலையில்லா  மிதிவண்டிகள் : திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்

திருவள்ளூர் செப் 21 : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பூண்டி ஊரபாட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 80 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால், பூண்டி ஊராட்சி மன்றத்தலைவரும் ஒன்றிய துணை செயலாளருமான சித்ரா ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஜம்பு வரவேற்றார். பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் கிறிஸ்டி என்கிற அன்பரசு முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 80 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.
பள்ளி மாணவ மாணவிகளின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆசிரியர்கள் சொல்வதை வேதவாக்காக நினைத்து நன்றாக படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். வாழ்க்கைக்கு மிக முக்கியமானது படிப்பு மட்டும் தான். எனவே கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை நீங்கள் நன்றாக படித்து நல்ல வேளையில் சேர்ந்து காப்பாற்ற வேண்டும் என்றும், படிப்பு ஒன்று தான் முக்கியம் என்றும், அனைவரும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, கே.யு.சிவசங்கரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தா.மோதிலால், திருவள்ளூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் பொன்.பாண்டியன், ஐ.ஏ.மகிமைதாஸ், ஒன்றிய நிர்வாகிகள், கே.பட்டரை பாஸ்கர், இ.லட்சுமணன், அ.ஆனந்த், பி.தேவேந்திரன், ஜி.டில்லிபாபு, சௌக்கர் பாண்டியன், தா.நடராஜ், எம்.லிங்கேஷ்குமார், வி.எஸ்.சதீஷ், எம்.எழில், எம்.கௌதம், பி.ராஜாசிங், எம்.திருமால், ஜோசப், பூண்டி நிர்வாகிகள் எம்.எஸ்.அருண், வடிவேல், சுதாகர், ரகு, குமரேசன், கணேஷ், கோபி, அன்பு எல்.மோகன், ரமேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கே.வளவன் நன்றி கூறினார். விலையில்லா மிதிவண்டியை பெற்ற மாணவ மாணவிகள் அரசுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.