பூண்டி ஊராட்சியில் இரு வேறு இடங்களில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிரான்ஸ்பார்மர்களை திருவள்ளூர் எம்.எல்.ஏ., பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி தொடங்கி வைத்தார்

பதிவு:2022-09-21 09:54:08



பூண்டி ஊராட்சியில் இரு வேறு இடங்களில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிரான்ஸ்பார்மர்களை திருவள்ளூர் எம்.எல்.ஏ., பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி தொடங்கி வைத்தார்

பூண்டி ஊராட்சியில் இரு வேறு இடங்களில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிரான்ஸ்பார்மர்களை திருவள்ளூர் எம்.எல்.ஏ., பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் செப் 21 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பூண்டி கிராமத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக சரிவர மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பூண்டி ஊராட்சியில் உள்ள ஜெயராமன் தெருவில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் 100 கே.வி. புதிய டிரான்ஸ்பாமரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி தொடங்கி வைத்தார். இதனால் ஜெயராமன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் பூண்டி பேருந்து நிலையம் அருகில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதனையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார். இதனால் அந்தப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்காது எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த இரண்டு ட்ரான்ஸ்பார்மர் இயக்கி வைத்த நிகழ்ச்சியில் பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால், பூண்டி ஊராட்சி மன்றத்தலைவரும் ஒன்றிய துணை செயலாளருமான சித்ரா ரமேஷ், பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் கிறிஸ்டி என்கிற அன்பரசு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, கே.யு.சிவசங்கரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தா.மோதிலால், திருவள்ளூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் பொன்.பாண்டியன், ஐ.ஏ.மகிமைதாஸ், காஞ்சிப்பாடி சரவணன், ஒன்றிய நிர்வாகிகள், கே.பட்டரை பாஸ்கர், இ.லட்சுமணன், அ.ஆனந்த், பி.தேவேந்திரன், ஜி.டில்லிபாபு, சௌக்கர் பாண்டியன், தா.நடராஜ், எம்.லிங்கேஷ்குமார், வி.எஸ்.சதீஷ், எம்.எழில், எம்.கௌதம், பி.ராஜாசிங், எம்.திருமால், ஜோசப், பூண்டி நிர்வாகிகள் எம்.எஸ்.அருண், வடிவேல், சுதாகர், ரகு, குமரேசன், கணேஷ், கோபி, அன்பு எல்.மோகன், ரமேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.