திருவள்ளூரிலிருந்து லாரி மூலம் ஏற்றுச் செல்லப்பட்ட ட்ரெய்லர் மரத்தில் சிக்கியதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பதிவு:2022-09-21 09:57:48

திருவள்ளூரிலிருந்து லாரி மூலம் ஏற்றுச் செல்லப்பட்ட ட்ரெய்லர் மரத்தில் சிக்கியதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரிலிருந்து லாரி மூலம் ஏற்றுச் செல்லப்பட்ட ட்ரெய்லர் மரத்தில் சிக்கியதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் செப் 21 : திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் அருகே ஜேசிபி பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை அந்த தொழிற்சாலையில் இருந்து பெரிய ட்ரெய்லரை லாரியில் ஏற்றிக்கொண்டு மேல்நல்லாத்தூரில் இருந்து புறப்பட்டு திருவள்ளூரை தாண்டி லாரி ஒன்று ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.

இந்த புதிய ட்ரெய்லர் நெடுஞ்சாலை ஓரம் உள்ள மரக்கிளையில் சிக்கியது. இதனால் லாரி நகர முடியாமல் நடுச்சாலையில் சிக்கியதால் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன் 2 மணி நேரம் போராடி ஜேசிபி இயந்திரம் மூலம் மரக்கிளையை உடைத்து ட்ரெய்லரை விடுவித்தனர். இதனால் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.