திருவள்ளூரில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2022-09-21 10:03:31

திருவள்ளூர் செப் 21 : பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள 5486 ஜீனியர் அசோசியேட்ஸ் காலிப்பணியிடங்களுக்கும் மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ள 20,000 காலிப்பணிக்காலியிடங்களுக்கும் விண்ணப்பித்த, விண்ணப்பிக்கவுள்ள பட்டப்படிப்பு கல்வித்தகுதியுடைய திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers என்ற இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள். 27.09.2022 ஆகும். மேலும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு https://ssc.nic.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள். 08.10.2022 ஆகும்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம்.இவ்விலவச பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை 24.09.2022 முதல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-27660250, 9499055893 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.