மாணவ, மாணவியர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

பதிவு:2022-09-27 15:13:24



திருவள்ளூரில் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

மாணவ, மாணவியர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் செப் 27 : திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல் பரிசுத்தொகை ரூ.10,000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.7,000,மூன்றாம் பரிசுத் தொகை ரூ.5,000 என 6 பேருக்கும் மாவட்ட ஆட்சியரால் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 03.06.2022, 29.07.2022 ஆகிய நாள்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றன. 15.09.2022 அன்று அறிஞர் அண்ணா, 17.09.2022 அன்று தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியருக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவியருக்கு முதல் பரிசுத் தொகை ரூ.5000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3000,மூன்றாம் பரிசுத் தொகை ரூ.2000 மற்றும் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகை ரூ.2000 என மாவட்ட ஆட்சியர் அவர்களால் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு நாள் விழா, முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், அறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 30 பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.இதில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சீ.சந்தானலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.