பதிவு:2022-09-27 15:19:56
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் அப்துல் கலாம் வருகை புரிந்த 9-ஆம் ஆண்டு நினைவு கூறும் வகையில் அவரது 9- அடி உயரமான படத்தை வரைந்து மரியாதை
திருவள்ளூர் செப் 27 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர், மாணவர்களின் வழிகாட்டி டாக்டர்.அப்துல் கலாம் வருகை புரிந்த 9-ஆம் ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் வழிபாட்டுக் கூட்டத்தில் கலாம் ஐயா அவர்களைப் பற்றிய சிந்தனைகளை எடுத்துரைத்தனர். அப்துல் கலாம் நேர்மையான வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய பாடல்களை பாடியும் சொற்பொழிவினை ஆற்றியும், கலாம் ஐயா அவர்களின் உருவப்படத்திற்கு வண்ணம் தீட்டியும் கைரேகை வைத்தும், மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் தங்களது அன்பினையும், பணிவான வணக்கங்களையும், கனிவான பாசத்தையும் கலாம் அவர்களின் திருப்பாதங்களுக்கு உரித்தாக்கினர். ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி. நந்திதா டாக்டர் அப்துல் கலாம் வருகை புரிந்த 9-ஆம் ஆண்டினை நினைவு கூறும் வகையில், அவரது உருவம் பொறித்த 9- அடி உயரமான படத்தை வரைந்து கலாம் ஐயா அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 11-ஆம் வகுப்பு மாணவர். G.ரவிவர்மா அவர்களும் கலாம் ஐயாவின் உருவப்படத்தை வரைந்து தனது பாசத்தை வெளிப்படுத்தினார். பள்ளி மாணவச் செல்வங்கள் நிகழ்த்திக் காட்டிய இந்த அற்புத நிகழ்வைக் கண்ட பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாராட்டுதலை தெரிவித்தனர்.கலாம் ஐயா அவர்களின் வழியில் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும், உயிர் நேயத்துடனும் என்றும் வெற்றி நடை போடுவோம் என்று கலாம் ஐயா வருக புரிந்த இந்நன்னாளில் உறுதி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்விற்கு மாணவர்களை வழிநடத்திய தமிழாசிரியர் திருக்குறள் செம்மல்.க. செந்தில் குமார், ஓவிய ஆசிரியர் மாதவன் ஆகியோரை பள்ளி நிர்வாகம் வாழ்த்தியது இதில் பள்ளி தாளாளர் விஷ்ணு சரண்,இயக்குனர் பரணிதரன்,பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப்,பள்ளி துணை முதல்வர் கவிதா கந்தசாமி,தலைமை ஆசிரியர்கள் பத்மாவதி,ஷாலினி ஆகியோர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டி இனிப்பு வழங்கினர்.