திருவள்ளூர் மாவட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கான சுகாதார பயிற்சி துவக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகை வெளியீட்டு விழா

பதிவு:2022-09-27 15:22:40



திருவள்ளூர் மாவட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கான சுகாதார பயிற்சி துவக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகை வெளியீட்டு விழா

திருவள்ளூர் மாவட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கான சுகாதார பயிற்சி துவக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகை வெளியீட்டு விழா

திருவள்ளூர் செப் 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் திருவள்ளூர் மாவட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கான சுகாதார பயிற்சி துவக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகை வெளியீட்டு விழாவில் தூய்மை பணியில் ஈடுபடும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வளரிளம் பருவ பள்ளி மாணவர்களிடையே நிலவும் போதைப் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகும் நிலைலிருந்து வளரிளம் மாணவர்களை மீ;ட்டெடுப்பது மற்றும் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாகச் சென்று போதை தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துரைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர் நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை வாங்குபவர்கள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், முதற் கட்டமாக திருவள்ளுர் மாவட்டம், புழல், வில்லிவாக்கம், மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஆகிய நான்கு ஒன்றியங்களைச் சேர்ந்த 1,25,000 மாணவர்களுக்கு போதைப்பழக்க வழக்கங்களுக்கு ஆட்படாமலும், தங்களது உடல் நலம் காத்துக்கொள்வது குறித்தும், நமக்கு வாழ்க்கையில் பிரச்சனை வரும்பொழுது எப்படி எதிர்கொள்ள வேண்டும். மன ஆரோக்கியத்தை எப்படி காக்க வேண்டும் என்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் முயற்சியின் அடிப்படையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியானது ஒரு வருட காலத்திற்கு அளிக்கப்படவுள்ளது எனவும்,மேலும், தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் தங்களது உடல் நலத்தை காத்துக்கொள்கிற வகையில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தங்களது பகுதியில் உள்ள பொதுமக்களிடையே சுகாதாரம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, பெண் தூய்மை பணியாளர்களுக்கு மறுமுறை பயன்படுத்தக்கூடிய சுகாதார பெட்டகத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கியும், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை வெளியிட்டும், போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டேண்ட்டில் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.மேலும், இவ்விழாவில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் மாவட்ட ஆட்சியர் தூய்மை பணியாளர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ்குமார், தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரிகள், இயக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.