பதிவு:2022-09-28 18:26:47
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுலா தினத்தையொட்டி வினாடி-வினா போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திருவள்ளூர் செப் 28 : உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தி அதன் மூலம் உலகளவில் சுற்றுலா குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தை “சுற்றுலா மறு சிந்தனை” என்ற கருப்பொருளை அறிவித்துள்ளது.
அந்த வகையில் திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுலாத் துறை சார்பாக சுற்றுலா தினத்தையொட்டி சுற்றுலா தலங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் ஸ்டேட், சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேசன் மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளி மாணாக்கர்கள் பங்கேற்று வெற்றி பெற்ற குழுக்களுக்கு முதல் பரிசாக ரூ.5000,இரண்டாம் பரிசாக ரூ.3000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000 என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையுரையாற்றி, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் எஸ்.ராஜாராம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆ.எல்லப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.