பதிவு:2022-09-28 20:37:47
மோவூர் கிராமத்தில் 17- வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் அச்சுறுத்தலால் தீக்குளிப்பு : 5 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுமியின் பெற்றோருக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி எஸ்பியிடம் புகார் :
திருவள்ளூர் செப் 28 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மோவூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதற்காக கடந்த 23-ந் தேதி சென்றுளார். அப்போது அந்த மாந்தோப்பில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் இந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலை ஏற்படுத்தி அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளனர். தங்களது ஆசைக்கு இணங்க மறுத்தால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதனால் செய்வதறியாத தவித்த சிறுமி மறுநாள் காலை வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து தீயிட்டு கொளுத்திக்கொண்டார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் எதற்காக தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார் என்பதை சிறுமியின் பெற்றோரால் யூகிக்க முடியாத நிலையில் நேற்று காலை நினைவு திரும்பியதும், தனது சித்தி மற்றும் பாட்டியிடம் அந்த 5 இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ததை வீடியோவாக எடுத்து மிரட்டியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோருடன் தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி திருவள்ளூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர். மாடு மேய்க்க சென்ற 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய 5 பேர் மீது கொடுத்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட எஸ்பி., பா.சிபாஸ்கல்யாண் சம்பந்தப்பட்ட இளைஞர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.