பதிவு:2022-09-28 20:43:02
இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் காஜாமுதீன் மற்றும் சாதிக் பாஷா திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் :
திருவள்ளூர் செப் 28 : திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த மன்னூர்பேட்டையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் முக்கிய குற்றவாளிகளுக்கு மட்டும் ஜாமீன் வழங்காமல் சிறையில் உள்ள நிலையில் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த (ஏ4) நான்காவது குற்றவாளியான காஜா மொய்தீன் மற்றும் கர்நாடக மாநிலத்தில் அடைக்கப்பட்டிருந்த (A9) ஒன்பாதாவது குற்றவாளி சாதிக் பாஷா ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகளை டெல்லி மற்றும் கர்நாடக போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்து வந்து திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வராணி முன்பு ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் குற்றவாளிகளுக்கு வரும் 01.11.2022 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்க பட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகள் திகார் மற்றும் கர்நாடக சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் . இதனால் திருவள்ளூர் மாவட்டஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.