பதிவு:2022-09-28 21:44:03
மென்பொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கிருஷ்ணா கால்வாயில் கவிழ்ந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுனர் : 2 மணி நேரம் போராடி லாரியை மீட்ட காவல்துறையினர் :
திருவள்ளூர் செப் 28 : சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் பெல்லாரி நோக்கி மென்பொருள் ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சாய் கங்கா கிருஷ்ணா கால்வாயில் தலைக்குப்பறாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது கார்த்திக் என்பவர் இன்று காலை அவ்வழியாக வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மினி வேன் செல்ல வழி விட்டபோது எதிர்பாராத விதமாக கிருஷ்ணா கால்வாயில் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார், உடனடியாக காவல்துறைக்கு அழைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் கிருஷ்ணா கால்வாயில் விழுந்த கண்டைனர் லாரியை சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது