திருவள்ளூர் அருகே தீபாவளி பண்டு சீட்டு பிடித்து பல கோடி மோசடி செய்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை : பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

பதிவு:2022-09-28 21:46:40



திருவள்ளூர் அருகே தீபாவளி பண்டு சீட்டு பிடித்து பல கோடி மோசடி செய்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை : பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திருவள்ளூர் அருகே தீபாவளி பண்டு சீட்டு பிடித்து பல கோடி மோசடி செய்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை  இல்லை : பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திருவள்ளூர் செப் 28 : திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜே.பி. ஜோதி என்பவர் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் ஜே.பி. ஸ்டார் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இவர் மளிகை கடையுடன் தீபாவளி பண்டு சீட்டும் நடத்தி வந்துள்ளார். பிரதி மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு மற்றும் வெள்ளி பாத்திரங்கள் வழங்குவதாகவும் மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அந்தந்த கிராமங்களில் ஏஜென்ட்டுகள் நியமித்து ஏஜென்ட்டு மூலமாக ஆயிரக் கணக்கானோரிடம் பணம் வசூல் செய்து பொதுமக்களின் பணத்தில் தாமரைபாக்கம், திருவள்ளூர், மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜே.பி. .ஸ்டார் ஏஜென்சி புதிய கடைகளை திறந்த ஆடம்பர செலவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20-ந் தேதி பணம் தருவதாக கூறியதையடுத்து அங்கு சென்று கேட்ட போது, சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் வைதேகி என்ற பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனை தடுக்க வந்த வைதேகியின் கணவரை பலமாக தாக்கியதில் அவருக்கு தோள்பட்டை முறிவும், தலையில் பலத்த காயமும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் வேதேகி உள்ளிட்ட ஏராளமானோர் புகார் கொடுத்தும், எஸ்.ஐ.ராஜேந்திரன், எழுத்தர் பன்னீர் செல்வம் ஆகியோர் இரு தரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்து, சாதி ரீதியிலான புகார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் அலைக்கழித்துள்ளனர்.

எனவே பணம் கட்டி ஏமாந்தவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கோடிக் கணக்கில் ஏமாற்றியவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.

தாமரைபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு, குறுவாயில் உட்பட பல கிராமங்களில் தீபாவளி பண்டு சீட்டு பிடித்து ரூ. 2 கோடிக்கு மேல் ஏமாற்றிவிட்டு தலைமறைவான ஜோதியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.