திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 2 ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்துவகை மதுக்கூடங்களும் மூட வேண்டும் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பதிவு:2022-09-28 21:49:06

திருவள்ளூர் செப் 28 : தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வரும் 02.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உத்தரவை மீறி மதுக்கூடங்கள் திறப்போர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரித்துள்ளார்.