ஆவடியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போக்சோ வழக்கில் 74 வயது முதியவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

பதிவு:2022-09-29 11:38:05

திருவள்ளூர் செப் 29 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ல் ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் தாயார் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தனது மகளை பக்கத்து வீட்டுக்காரரான 74 வயது முதியவர் மு.பலராம் சிங் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மேலும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேர் மீதான பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து திருவள்ளூர் மாவட்ட மகளிா நீதிமன்ற நீதிபதி சுபத்திராதேவி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 74 வயது முதியவர் மு.பலராம் சிங்கிற்கு 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 4500 ரூபாய் அபராதமும் விதித்திருந்தார். தீர்ப்புக்குப் பின் 69 வயது முதியவர் புழல் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.