திருவள்ளூரில் மாபெரும் புத்தக திருவிழாவில் “சாலை பாதுகாப்பு” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தலைக்கவசங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

பதிவு:2022-04-07 13:58:38



திருவள்ளூரில் மாபெரும் புத்தக திருவிழாவில் “சாலை பாதுகாப்பு” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தலைக்கவசங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூரில் மாபெரும் புத்தக திருவிழாவில் “சாலை பாதுகாப்பு” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தலைக்கவசங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூர் ஏப் 08 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் புத்தக திருவிழா - 2022 மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் 6-ஆம் நாள் நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட இளைஞர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் என சுமார் 4000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்து சுமார் ரூ.5 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதை தொடர்ந்து “சாலை பாதுகாப்பு” குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நம்ம திருவள்ளுரு விபத்தில்லா ஊரு” என்ற இலட்சையினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.

முன்னதாக, பள்ளி. கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இக்கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், வாசகர்கள் என சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் திரளாக வருகை புரிந்து கண்டு களித்தனர்.மேலும், 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடைபெறும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் 6-ம் நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கண்டு களித்தனர்.

அதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பாக நமது மாவட்டத்தில் “சாலை பாதுகாப்பு” குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் “நம்ம திருவள்ளுரு விபத்தில்லா ஊரு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தலைகவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் பொதுமக்களுக்கு இலவசமாக தலைக்கவசங்களை வழங்கினார்.

பின்னர் “தேர்வுக்கு ஒரு திறவுகோல்;” என்ற தலைப்பில் துணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் கழகம் டாக்டர்.சங்கர சரவணன் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து, “வாசிப்புப் பண்பாடு” என்ற தலைப்பில் ச.தமிழ்செல்வன் கருத்துரை வழங்கினார். மேலும், “உணர்ச்சிகளை வென்றால் உன்னத வாழ்வு” என்ற தலைப்பில் சிறப்பு திறன் கொண்ட உத்வேக பேச்சாளர் இன்ஸ்பயர் இளங்கோ கருத்துரை வழங்கி, இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.அதனைத் தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அரசு நூலகங்களுக்கு நன்கொடையாக புத்தகம் வழங்க விரும்பும் அறிவு சார் நன்கொடையாளர்களுக்காக புத்தக கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள அறிவு பாலம் அரங்கிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்; புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர் சங்கம் சார்பாக, அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் மற்றும் காப்பாளர் சங்கம் சார்பாக அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்படுத்துவதற்காக ரூ.20 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களையும் ஆட்சியர் வழங்கினார்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண் குமார்,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.இளமுருகன், காவல் துறையினர், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.