ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானியின் மகனுக்கு நேர்ந்த கொடுமை காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை இல்லாததால் கண்ணீர் மல்க தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள்

பதிவு:2022-09-29 15:49:59



ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானியின் மகனுக்கு நேர்ந்த கொடுமை காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை இல்லாததால் கண்ணீர் மல்க தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள்

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானியின் மகனுக்கு நேர்ந்த கொடுமை காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை இல்லாததால்  கண்ணீர் மல்க தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள்

திருவள்ளூர் செப் 29 : திருநின்றவூரில் வசிக்கும் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ஏபிஜே அப்துல் கலாம் உடன் இஸ்ரோவில் ஒன்றாக பணியாற்றி ஓய்வு பெற்று மறைந்த விஞ்ஞானி கே ஆர் கே ராமன் அவர்களின் இளைய மகன் அஜய் ராமணை காரில் வந்த மர்ம கும்பல் வீட்டை காலி செய்யக்கோரி அடித்துஉதைத்து சுத்தியலால் தாக்கி அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி, மற்றும் வீட்டில் இருந்த அவரது தாயாரின் நகை செல்போன் ஆகியவற்றை கொலை மிரட்டல் விடுத்து கத்தி முனையில் பறித்து சென்றனர்.

கோபிநாத் என்பவரின் தலைமையில் வந்த கூலிப்படையினர் சுத்தியலால் தாக்கியதால் ஏற்பட்ட உள் காயங்களால் பாதிக்கப்பட்டவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். திருடு போன தாயார் மீரா ராமனின் நகை சொத்து ஆவணங்கள் அறக்கட்டளை ஆவணங்கள் மற்றும் அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகை செல்போன் ஆகியவற்றை மீட்டு தர கோரி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அங்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே தனது வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு மூளை பாதிப்பு நோயால் அவதி உற்று வரும் உடன் பிறந்த அண்ணனை பஞ்சாப் மாநிலத்தில் வைத்துக்கொண்டு திருநின்றவூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானியின் மகன் மோசடியான முறையில் ஏற்கனவே அவருக்கு விற்ற வீட்டை வேறொரு நபருக்கு விற்பனை செய்த அன்பு ரோஸ் மற்றும் ஆல்வின் மீதும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் 28 லட்ச ரூபாயை திருப்பி தராமல் வீட்டை கோபிநாத் என்ற நபருக்கு விற்றதால் அவர் அடியாட்களுடன் வந்து வீட்டை காலி செய்ய வேண்டும்.

இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியதால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள தனக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உதவ வேண்டுமென விஞ்ஞானியின் மகன் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்