பதிவு:2022-10-05 14:47:24
திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தன் சொந்த செலவில் ரூ.6.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா
திருவள்ளூர் அக் 05 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது உளுந்தை கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் போதிய சுத்திகரிக்கப்பட்டகுடிநீர் வசதி கிடைக்காமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் எம் கே ரமேஷ் தனது சொந்த செலவில் பொதுமக்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைக்க முடிவு செய்தார்.
அதன் அடிப்படையில் ஆயுத பூஜை விழா நாளான நேற்று சிறப்பு பூஜை செய்து,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தனது சொந்த செலவில் ரூ 6.75 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் எம் கே ரமேஷ் தலைமை தாங்கினார். கடம்பத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ், திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் ஆகியோர் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.
பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உளுந்தை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வசந்தா, வார்டு உறுப்பினர்கள் ஏ.கோமதி, ஏ.காவேரி, ஜி.மேகவர்ணன், ஆர்.வசந்தா, கே.பத்மாவதி, டி.சொர்ணாம்பிகா மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.