திருத்தணியில் மின் கம்பங்கள், குடிநீர் பம்பு அப்புறப்படுத்தாமல் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொண்டு வருவதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம்

பதிவு:2022-10-05 14:49:17

திருவள்ளூர் அக் 05 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில காலமாக நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. இதனால் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உள் கட்டமைப்பு திட்டத்திற்கு ரூபாய் 1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இரு புறமும் விரிவுபடுத்தி நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்த பணி அரக்கோணம் சாலை, ம.பொ.சி சாலை, அக்கையா சாலை, உட்பட முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் சென்று வர சிமெண்ட் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் அலட்சியமாக சாலை விரிவாக்கம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும் இதனால் சாலைப் பகுதியில் மின் கம்பங்கள், கை பம்பு அப்புறப்படுத்தாமல் சாலை அமைத்து வருவதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது . எனவே சாலை விரிவாக்கப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மின்கம்பங்கள் மற்றும் கை பம்புகளை முறையாக அப்புறப்படுத்தி சாலை விரிவாக்கம் மேற்கொண்டு நடைமேடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், நகர மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.