பதிவு:2022-10-05 14:54:05
திருவள்ளூர் அருகே கடித்த கட்டு விரியன் பாம்பு கடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில் அண்ணன் பரிதாபமாக உயிரிழப்பு : தம்பி ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
திருவள்ளூர் அக் 05 : திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி எஸ்.பி கோயில் தெருவில் வசிப்பவர் பாபு . இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அண்ணன் தம்பி இரண்டு பேரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு கடித்ததில் இரண்டு மகன்களான ரமேஷ்(13) மற்றும் தேவராஜ் (12) ஆகிய இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். இதில் அண்ணன் மூத்த மகன் ரமேஷ் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
2-வது மகன் தேவராஜ்க்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடித்த பாம்புடன் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.