கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாலை வசதி,பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம மக்கள் போராட்டம் :

பதிவு:2022-04-07 18:11:43



கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாலை வசதி,பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம மக்கள் போராட்டம் :

கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாலை வசதி,பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம மக்கள் போராட்டம் :

திருவள்ளூர் ஏப் 07 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கம் மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். இந்த தண்டலம் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவோ, இரயில் நிலையம் செல்லவோ, அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வரவும் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கூவம் ஆற்றுப் பகுதியில் உள்ள தரைப் பாலம் சேதமடைந்ததால் 2 கிலோ மீட்டர் தூரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வர முடியாத நிலை இருப்பதால் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தலைவர் மணி மற்றும் விக்கிரமாதித்தன், மற்றும் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலகம் தான் இதற்கான முடிவை அறிவிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் சாலை வசதி,பேருந்து வசதி, மற்றும் உயர்மட்ட பாலம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் நேரில் வந்து ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்படும் எனவும் எச்சரித்தனர்.