பதிவு:2022-10-09 17:38:06
ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த நபர் கைது : இரு சக்கர வாகனம் மற்றும் 30 லிட்டர் எரி சாராயத்தையும் பறிமுதல்
திருவள்ளூர் அக் 08 : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் வசிக்கும் சிலர் மோட்டார் சைக்கிளில் ஆந்திராவில் இருந்து எரி சாராயம் கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அந்த எரிசாராயத்தில் தண்ணீர் கலந்து கள்ளச்சாராயமாக விற்பனை செய்வதாக கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் ஆந்திர ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள சிவாடா பஸ் நிறுத்தம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஆந்திரப் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெமிலி முத்து மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வெங்கடேசன் என்பதும் பிளாஸ்டிக் பையில் 30 லிட்டர் எரி சாராயத்தை ஆந்திராவிலிருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் கள்ளச்சாராயத்திற்கு மூலப் பொருளான 30 லிட்டர் எரி சாராயத்தை வாங்கி வந்து அதல் தண்ணீர் கலந்து மேலும் காய்ச்சி அதனை 300 லிட்டர் கள்ளச்சாராயமாக விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேசனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.