திருத்தணி அருகே எதிரே வந்த தண்ணீர் டேங்கர் மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் தொழிற்சாலை பேருந்து பிரேக் போட்டதால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதி விபத்து : அனைவரும் காயமின்றி உயிர தப்பினர்

பதிவு:2022-10-09 17:41:29

திருவள்ளூர் அக் 08 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அருங்குளம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தனியார் தொழிற்சாலை பேருந்து ஊழியர்கள் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் போரூரில் இருந்து புறப்பட்ட கார் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட 201 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து திருத்தணி அருகே வந்து கொண்டிருந்தது.‌

அப்போது எதிரே தண்ணீர் டேங்கர் வந்ததால் அதன் மீது இடிக்காமல் இருப்பதற்காக தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதனால் பின்னால் வந்த கார் தனியார் பேருந்து மோத பின்னால் வந்த அரசு பேருந்து கார் மீது மோதியது.

அடுத்தடுத்து பேருந்து கார் என மூன்று வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் கோவிந்தராஜ், தனியார் பேருந்து ஓட்டுனர் ரவிக்குமார், கார் ஓட்டுனர் பிரசாத் ஆகிய யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.