திருத்தணியில் பணிச்சுமை காரணமாக அரசு பேருந்து ஓட்டுனர் பணிமனை முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு

பதிவு:2022-10-11 08:33:37



திருத்தணியில் பணிச்சுமை காரணமாக அரசு பேருந்து ஓட்டுனர் பணிமனை முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு

திருத்தணியில் பணிச்சுமை காரணமாக அரசு பேருந்து ஓட்டுனர் பணிமனை முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு

திருவள்ளூர் அக் 10 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாம்பாக்க சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருவய்யா. 52 வயது ஆகும்‌ இவர் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த, 7 ம் தேதி வழக்கம் போல் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று சென்னை-திருப்பதி செல்லும் தடம் எண்:201 என்ற அரசு பஸ்சை இயக்கினார். ஓட்டுனர் பற்றாக்குறையால் நேற்று முன்தினமும் 8-ம் தேதியும் அதே பஸ்சை குருவய்யா இயக்கினார்.

மீண்டும் பணி முடிந்ததும் பஸ்சை பணிமனையில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது, பணிமனை அதிகாரி, குருவய்யாவை கூப்பிட்டு, இன்று சிறப்பு பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பதால், மீண்டும் ஓட்டுனர் பணி செய்ய வேண்டும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஓட்டுனர் குருவய்யா இரு நாட்கள் தொடர்ந்து வேலை செய்ததால், என் உடம்பு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் என்னால் சிறப்பு பேருந்து இயக்க முடியாது என கூறியும் பணிமனை அதிகாரி மிரட்டல் தோணியில் கட்டாயம் வேலைக்கு வரவேண்டும் நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஓட்டுனர் குருவய்யா பூச்சி கொல்லி மருந்து வாங்கி வந்து பணிமனை முன்பு குடித்து மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அங்கிருந்த சக ஊழியர்கள் உடனடியாக குருவய்யாவை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது ஓட்டுனர் குருவய்யா அவசர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது குருவய்யா நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த பணிமனையில், ஓட்டுனர், நடத்துனர்கள் பற்றாக்குறையால், ஊழியர்களை வேலைக்கு தொடர்ந்து வருமாறு கட்டாயப்படுத்துவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.