பதிவு:2022-10-11 08:36:06
திருத்தணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளோ, போதிய மருத்துவர்களோ, ஊழியர்களோ இல்லாததால் கர்ப்பிணிப் பெண்கள் அவதி
திருவள்ளூர் அக் 10 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மாதாந்திர பரிசோதனைக்காக வருகை தருகின்றனர்.
ஆனால் அங்கு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகளோ, மருத்துவமனை வளாகத்தில் மின்விசிறி வசதியோ இல்லை. இதனால் மாதாந்திர பரிசோதனைக்கு வரும் கர்பிபணிப் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அதே நேரத்தில் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பதாலும், போதிய ஊழியர்களோ, செவிலியர்களோ இல்லாததால் பரிசோதனைக்கு வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கர்ப்பிணிப் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்
அதே நேரத்தில் அரசு சார்பில் கர்ப்பணிப் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை முறையாக வழங்குவதில்லை என்றும், இது குறித்து கேட்கும் போது தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாகவும் கர்ப்பிணிப் பெண்கள் தெரிவிக்கின்றனர்.