பதிவு:2022-10-11 08:39:46
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் திருட்டு : சிசிடிவியில் இளைஞர் திருடி செல்லும் காட்சிகளைக் கொண்டு திருவாலங்காடு போலீசார் விசாரணை
திருவள்ளூர் அக் 10 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் உள்ளது திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இங்கு மெஷின் ஆப்பரேட்டராக பணிபுரிபவர் தங்கவேலு . இவர் இன்று வழக்கம்போல தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆலைக்கு பணிக்கு வந்தவர் வாகனத்தை சர்க்கரை ஆலைக்கு வெளியே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் விட்டு சென்றார்.
இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வானத்தை எடுக்க சென்ற போது, அங்கு தங்கவேலுவின் வாகனம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஆலை அருகே தேடிப் பார்த்தும் காணாததால் தனது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து திருடு போன வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு திருவாலங்காடு காவல் நிலையத்தில் தங்கவேலு புகார் அளித்துள்ளார்.இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமிராவில் இளைஞர் இரு சக்கர வாகனத்தை எடுத்துச்செல்லும் பதிவுகளைக் கொண்டு தேடி வருகின்றனர்.