பதிவு:2022-04-08 01:11:32
திருவள்ளூரில் பா.ஜ.கவின் 42-ஆவது ஆண்டு தின விழாவில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானம் :
திருவள்ளூர் ஏப் 08 : பாரதிய ஜனதா கட்சியின் 42- வது ஆண்டு தினத்தை மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் ஆணைக்கிணங்க பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் 42-வது ஆண்டு தின விழாவுக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், திருவள்ளூர் நகர தலைவர் சதீஷ், மாநில மகளிர் அணி தலைவர் மீனாட்சி சுந்தர், நிர்வாகி சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தியது குறித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நாள்தோறும் கிராமங்கள் தோறும் நேரில் சென்று விளக்கமாக எடுத்துரைக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அதற்கு முன்னதாக அக்கட்சியினர் பங்கேற்ற பேரணி மணவாளநகரில் தொடங்கி, பெரியகுப்பம், ஆயில் மில், ஜெயின் நகரில் நிறைவு பெற்றது.இதே போல், திருவள்ளூர் அருகே எறையூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடுகாடு ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், திருவள்ளூர் நகர நிர்வாகி ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.