பதிவு:2022-10-11 08:43:24
திருத்தணி அடுத்த பொதட்டூரில் வராக சுவாமி திருக்கோயி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தரணி வராக சுவாமி திருக்கல்யாணம்
திருவள்ளூர் அக் 10 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மேல் பொதட்டூரில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத தரணி வராக சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத தரணி வராகசுவாமி திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தை முன்னி்ட்டு சுவாமிக்கு பக்தர்கள் பட்டு வஸ்திரங்கள், பழங்கள், சீர்வரிசை கொண்டு வந்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டாச்சாரியார்கள் குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பெண்களுக்கு தாலி மஞ்சள் குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.