திருத்தணியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :

பதிவு:2022-10-12 12:15:29



திருத்தணியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :

திருத்தணியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :

திருவள்ளூர் அக் 12 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.அப்பொழுது அமைச்சர் தெரிவித்ததாவது :

குழந்தை திருமணத்தை தடை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடும், அதே நேரத்தில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற உணர்வோடும் நம் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் (35) குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுவதை தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மே-2021 முதல் தற்போது வரை 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்களை தடுக்க தற்போது வரை அனைத்து வட்டாரங்களிலும் மொத்தம் 15 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட 28 குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.திருவள்ளுர் மாவட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள 98 பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் குழந்தை திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கு உறுதிமொழி மேற்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, தமக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணத்திலிருந்து மீண்டெழுந்த 3 மாணவியர்கள் தம் அனுபவங்களை மாணவியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணத்திலிருந்து மீண்டு தற்பொழுது கல்லூரியில் பயின்று வரும் 3 மாணவியர்களை பால்வளத்துறை அமைச்சர் பாராட்டி கேடயங்களை வழங்கினார்.

மேலும், இவ்விழாவில் பெண் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து அஞ்சல் அட்டை மூலம் உறுதிமொழி ஏற்கும் வகையில் 1400 மாணவியர்களின் பெற்றோருக்கு அஞ்சல் அட்டைகளையும், மாவட்ட அளவில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்து பள்ளி மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவியர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார்.

இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெ.ஹஸ்வத் பேகம், முன்னாள் திருத்தணி நகர மன்ற உறுப்பினர் பூபதி, திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தங்கதனம் தங்கராஜ் (திருத்தணி), ரஞ்சிதா ஆபாவாணன் (ஆர்.கே.பேட்டை), திருத்தணி நகர்மன்ற துணைத் தலைவர் சாமி ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாணவியர்கள் பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.