திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் திமுகவின் தோழமைக் கட்சிகள் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

பதிவு:2022-10-12 12:28:41



திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் திமுகவின் தோழமைக் கட்சிகள் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் திமுகவின் தோழமைக் கட்சிகள் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

திருவள்ளூர் அக் 12 : மத்திய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை மக்கள் இடையே மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிளவுகளை ஏற்படுத்தி பிரிவினை செய்வதை கண்டித்தும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மு வா சித்தார்த்தன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ் டி பி ஐ மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக திருவள்ளூர் உழவர் சந்தை அருகே ஒன்று திரண்டு சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியாவின் ஜனநாயக கொள்கையை சிதைத்து ஜாதி ரீதியாகவும், மதரீதியாகவும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரிடையே பிரிவினைவாதத்தை உண்டு பண்ணுகிறது. இதை எதிர்த்தும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு செயலாளர் நீல வானத்து நிலவன் மாநில வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் செஞ்சி செல்வம் மற்றும் நிர்வாகிகள் கைவண்டூர் செந்தில் யோகா எஸ் கே குமார் கடம்பத்தூர் ஈசன் பூண்டி ராஜா மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாநில துணைத்தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன் மாநிலச் செயலாளர் மோகன்தாஸ், அருள்மொழி, வடிவேலு, இளங்கோவன், பூண்டி ராஜா, வி எஸ் ரகுராமன், அமுதன், தளபதி மூர்த்தி பழனி ராமன் முகுந்தன் பிரபாகரன் பேரம்பாக்கம் சதீஷ், திவாகர், ரமேஷ், பிடில பின்வாஸ், சரஸ்வதி, தங்கானூர் பாஸ்கர், செந்தில், பாடலீஈஸ்வரன், அதிகத்தூர் குமார், உமாபதி, ஜனா, கலைச்செல்வன், மனோகரன், வழக்கறிஞர் ராஜேந்திரன், ஜோதி சுதாகர், அன்பு, பியூலா , ஜோதி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட மதிமுக பொறுப்பாளர் பாபு தலைமை கழக பேச்சாளர் கனல் காசிநாதன் நகரச் செயலாளர் மணி அரசு மற்றும் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.