பதிவு:2022-04-08 01:29:09
ஸ்டாலின் சொத்து வரி உயர்த்தப்படாது, திமுகவின் வாக்குறுதி என்னாச்சு. என்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :
ஸ்டாலின் அண்ணாச்சி..ஸ்டாலின் அண்ணாச்சி..சொத்து வரி உயர்த்தப்படாது என்ற திமுகவின் வாக்குறுதி என்னாச்சு... திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஏப் 08 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திமுக அரசைக் கண்டித்தும், சொத்துவரி உயர்வைக் கண்டித்தும் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன், கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர், கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.ஹரி, சிறுபான்மை இணை செயலாளர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
சொத்து வரி உயர்வை 150 சதவிகிதம் உயர்த்தியதை உடனடியாக ரத்து செய்யவேண்டும் முழக்கங்களை எழுப்பினர். ஸ்டாலின் அண்ணாச்சி..ஸ்டாலின் அண்ணாச்சி..சொத்து வரி உயர்த்தப்படாது என்ற திமுகவின் வாக்குறுதி என்னாச்சு என அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வரலாறு காணாத வகையில் எந்த ஆட்சியாளரும் 150 சதவிகித சொத்துவரியை உயர்த்தியது இல்லை.
இது தோல்வி அடைந்த அரசாக இருப்பதாகவும், இது பொது மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுமானப் பொருட்களின் உயர்வு போன்ற காரணங்களால் ஒரு நிலையில் மக்களிடம் தோல்வி அடைந்த அரசாக, பொய்யான பிரச்சாரங்கள் மூலம் ஆட்சிக்கு வந்ததால் பொது மக்களால் இந்த திமுக அரசு தூக்கி எறியப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஏ மணிமாறன், கும்மிடிப்பூண்டி விஜயகுமார், திருவொற்றியூர் குப்பன்,திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், அதிமுக நிர்வாகிகள் நேசன், வேலஞ்சேரி சந்திரன், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, ஒன்றியசெயலாளர்கள் கடம்பத்தூர் சுதாகர்,பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்டரமணா, ஒன்றிய கவுன்சிலர் விஜி. உள்ளிட்ட அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.