திருவள்ளூர் மாவட்டத்தில் 93 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-10-12 15:25:05



திருவள்ளூர் மாவட்டத்தில் 93 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் 93 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் அக் 12 : திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடங்கள் சிறப்பு ஊதிய அடிப்படையில் குறைந்தது 11 ஆயிரத்து 100 முதல் 35 ஆயிரத்து 100 வரை என்ற அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 7-ந் தேதி வரை பெறப்படும்.30.09.2022 அன்று மனுதாரர் 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 32 வயதினையும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்ச வயது 37. மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில் , வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலமாக மனுதாரர் தேர்வு செய்யப்படுவார்.

மேலும், ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வாளர்கள் சம மதிப்பெண் பெற நேரும் பட்சத்தில் வயதிற்கேற்ப மூத்த தேர்வாளர்களை தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்ப மனுவினை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் தமிழக அரசின் இணையத்தளம் https://www.tn.gov.in மற்றும் வருவாய் நிருவாகத்துறையின் இணையத்தளம் https://cra.tn.gov.in ஆகிய இணையத்தளத்தின் மூலம் வருகிற 07.11.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.