திருவள்ளூர் நகராட்சி தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் விழிப்புணர்வு பேரணி

பதிவு:2022-10-12 23:36:15



திருவள்ளூர் நகராட்சி தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் நகராட்சி தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் அக் 12 : திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த என் குப்பை என் பொறுப்பு திட்டம் குறித்து பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தரா். நகராட்சி ஆணையர் க.ராலட்சமி வரவேற்றார். நகர்மன்றத் துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜீ, சுகாதார அலுவலர் சுதர்சனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ராஜாஜிசாலையில் தொடங்கிய இந்த பேரணி, குளக்கரை தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்த பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று, பொது மக்கள் துப்புரவுப் பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை பொது இடங்களில் கொட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன், தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் ரவி, நகர்மன்ற உறுப்பினர்கள் டி.கே.பாபு, இந்திரா பரசுராமன், வசந்தி வேலாயுதம், தனலட்சுமி, பிரபு, அம்பிகா ராஜசேகர், அயூப்அலி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.