திருத்தணி அருகே இரு வேறு இடங்களில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா : 2 கிலோ கஞ்சா மற்றும் வாகனங்கள் பறிமுதல் : 5 பேர் கைது

பதிவு:2022-10-13 16:23:09



திருத்தணி அருகே இரு வேறு இடங்களில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா : 2 கிலோ கஞ்சா மற்றும் வாகனங்கள் பறிமுதல் : 5 பேர் கைது

திருத்தணி அருகே இரு வேறு இடங்களில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா : 2 கிலோ கஞ்சா மற்றும் வாகனங்கள் பறிமுதல் : 5 பேர் கைது

திருவள்ளூர் அக் 13 : ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாக இருக்கிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதியான திருத்தணியில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன் படி இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி சுங்கச்சாவடி அருகே மத்தூரில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் புத்தூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் மேலும் சோதனை செய்ததில் அவர்களிடம் விற்பனைக்காக கொண்டு சென்ற 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்த திருத்தணி போலீசார் கடத்தலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ரியாஸ் மற்றும் சலேஷா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக செல்லக்கூடிய கார் ஒன்றில் கஞ்சா கடத்தி வருவதாக எஸ்பி பா.சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தமிழ்நாடு ஆந்திரா எல்லைப் பகுதியில் தடுப்பு வேலிகளை அமைத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்று காவல்துறை சோதனை மேற்கொள்வதை அறிந்து காரை வேகமாக இயக்கி தடுப்பு வேலிகளை உடைத்து அதிவேகமாக கடந்த சென்றது.

உடனடியாக காவல்துறை பின் தொடர்ந்து சென்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த சொகுசு கார் மாயமானது. இதனையடுத்து தனிப்படை அமைத்து அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாதன காட்சிகளைக் கொண்டு காவல் துறை தேடும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அந்த கார் அரக்கோணம் அடுத்த சைனாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது உடனடியாக காவல்துறை அங்கு சென்று ஏழுமலை மற்றும் அவரது நண்பரான ஹரி கிருஷ்ணன் என்ற தாஸ் கருணாகரன் ஆகிய மூவரை கைது செய்து திருத்தணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் காரில் இருந்த கஞ்சா குறித்து விசாரணை மேற்கொண்ட போது, காரில் வந்த ஐந்து நபர்கள் கஞ்சா வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே தலைமறைவாக உள்ள ஐந்து நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ஐந்து நபர்களை பிடித்தால் பெருமளவில் கஞ்சா சிக்கும் என காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.