“ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” : ரூ.15 இலட்சம் மதிப்பிலான 138 கிலோ கஞ்சா மற்றும் 86 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் :

பதிவு:2022-04-08 01:37:55



திருவள்ளூர் மாவட்டத்தில் “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” : ரூ.15 இலட்சம் மதிப்பிலான 138 கிலோ கஞ்சா மற்றும் 86 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் :

 “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0”  : ரூ.15 இலட்சம் மதிப்பிலான 138 கிலோ கஞ்சா மற்றும் 86 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” : ரூ.15 இலட்சம் மதிப்பிலான 138 கிலோ கஞ்சா மற் திருவள்ளூர் ஏப் 08 : தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்திரவின்படி தற்போது தமிழ்நாடு முழுவதும் “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” தொடங்கி கஞ்சா மற்றும் குட்கா தொடர்பான குற்றங்கள் குறித்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்த “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” கடந்த 28.03.2022 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கஞ்சா விற்பனை, குட்கா விற்பனை குறித்து தீவிர கண்காணிப்பும், தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் மற்றும் குட்கா பொருட்கள் கடத்தலை கண்காணிக்க திருவள்;ர் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த 5 சோதனைச் சாவடிகளுடன் கூடுதலாக 15 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 28.03.2022 ஆம் தேதி முதல் இதுநாள் வரை திருவள்;ர் மாவட்டத்தில் மொத்தம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 33 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.13,93,300 மதிப்புள்ள 138.93 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மொத்த கஞ்சாவில் பெரிய அளவில் கவரப்பேட்டையில் 33 கிலோ கஞ்சாவும், திருத்தணியில் 80 கிலோ கஞ்சாவும், ஆரம்பாக்கத்தில் 8 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நான்கு சக்கர வாகனம் ஒன்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோன்று குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 115 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1,14,670 மதிப்புள்ள சுமார் 86.29 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 தொடங்குவதற்கு முன்பு 10.03.2022 ஆம் தேதி கவரப்பேட்டை காவல் நிலையச் சரகம் கவரப்பேட்டை - சத்தியவேடு சாலை அருகே ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஸ்கார்ப்பியோ காரில் 230 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.23,00,000 மதிப்புள்ள 230 கிலோ கஞ்சாவும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கார்ப்பியோ காரும் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து இரகசிய தகவல் தெரிவிக்க வழங்கப்பட்டுள்ள 63799-04848 என்ற அலைபேசிக்கு கஞ்சா கடத்தல், குட்கா கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க விரும்பாதவர்கள் வாட்ஸ்ஆப் மூலம் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் இடம், மற்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் அனுப்பலாம். தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் இரகசியம் காக்கப்படும். தெரிவித்த தகவலின் அடிப்படையில் 10 கிலோ மற்றும் அதற்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டால் ரூ.10,000 சன்மானம் அளிக்கப்படும். இது காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். கல்லூரி வளாகம், பள்ளி வளாகம் மற்றும் இதர கல்வி ஸ்தாபனங்களில் கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோர்; “எஸ்.பி. உடன் தேனீர்” அருந்த அழைப்பு விடுக்கப்பட்டு உரிய மரியாதையுடன் தேனீர் அளித்து சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். மேலும் அவர்கள் பெயர், புகைப்படம் மற்றும் இதர அடையாளங்கள் இரகசியமாக இருக்கும். “இளைய சமுதாயத்தை மற்றும் வருங்கால தமிழகத்தை காக்க உதவிடுங்கள்” என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் கோரிக்கை விடுத்தார்.