பதிவு:2022-10-18 07:52:01
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் ஆர்பாட்டம்
திருவள்ளூர் அக் 17 : தமிழகம் முழுவதும் திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்ற நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன்,கிழக்கு மாவட்ட செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோரது தலைமை தாங்கினர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேலான திமுக இளைஞரணியினரும்,மாணவரணியினரும் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.இந்தி திணிப்பை என் நாளும் ஏற்க மாட்டோம்,உணர்வுமிக்க தமிழுக்காக உயிரையும் கொடுப்போம் என்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் முழக்கமிட்டனர்.
மேலும் இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்,பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி,மாநில மாணவரணி இணை செயலாலர் ஜெரால்டு,மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன்,கிழக்கு மாவட்ட அமைப்பாளர் உதயசூரியன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.பாபு, வெற்றி,உள்ளிட்ட இளைஞரணி,மாணவரனி நிர்வாகிகள்,திமுக நகர நிர்வாகிகள், நகரமன்ற தலைவர், துணை தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள் கிளைக் கழக நிர்வாகிகள்,வார்டு செயலாளர்கள், இளைஞரணியினர், மாணவரணியினர் கலந்து கொண்டனர்.