பதிவு:2022-10-18 08:01:27
புறநகர் ஓடும் ரயிலில் படியில் தொங்கியபடியும் கால்களை பிளாட்பாரத்தில் உரசியபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்த 3 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு
திருவள்ளூர் அக் 17 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அரக்கோணம் திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை திருவள்ளூரில் இருந்து புறப்பட்ட மின்சார ரயிலில் தொங்கியபடியும்ஆபத்தான முறையில் கால்களை பிளாட்பாரத்தில் உரசியபடியும் பயணித்த மூன்று இளைஞர்களை
ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் கே.பி.செபாஸ்டின். துணை உதவி ஆய்வாளர் வெங்கடேசலூ ஆகியோர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த மூன்று பேரும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் சுதாகர் மகன் சாரதி(19), ஆஸ்பெரா மகன் சயான்சா(18) பாலசுப்பிரமணியன் மகன் தீரஜ் ராகவ் (20) ஆகிய 3 பேர் மீதும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் புறநகர் ரயிலில் படியில் தொங்கியபடியும் காலை நடைமேடையில் உரசி கொண்டு சென்றதாக வழக்கு பதிவு செய்து சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.திருத்தணி அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் புறநகர் மின்சார ரயில்களில் படியில் தொங்கிய படியும், கால்களை பிளாட்பாரத்தில் உரசியபடியும் கத்திகளை பிளாட்பாரத்தில் உரசை படியும் செல்லும் மாணவர்களை ஏற்கனவே கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று வேலைக்கு செல்லும் மூன்று இளைஞர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலத்தில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி யாரும் பயணிக்கக் கூடாது எனவும் அவ்வாறு பயணிப்பவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் எனவும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எச்சரித்தனர்.