திருவள்ளூரில் தமிழக அரசின் தன்னிச்சையான 10 சதவீதம் போனஸ் அறிவிப்பை கண்டித்து அரசு பொதுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

பதிவு:2022-10-18 14:50:57

திருவள்ளூர் அக் 18 : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று தமிழக அரசு பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் தமிழக அரசின் தன்னிச்சையான 10 சதவிகிதம் போனஸ் அறிவிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் சந்திரன் தலைமை தாங்கினார்.

அரசு போக்குவரத்து கழக மாவட்ட துணை பொது செயலாளர் மாயக்கண்ணன்,சி.ஐ.டி யு மாவட்ட பொருளாளர் நித்தியானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக்,போக்குவரத்து, கூட்டுறவு மற்றும் மின்சாரத் துறையில் இருந்து திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் தன்னிச்சையான 10 சதவிகிதம் போனஸ் அறிவிப்பை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.முடிவில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் கிழக்கு மாவட்ட தலைவர் நந்தகோபால் நன்றி கூறினார்.