திருவள்ளூரில் 15 முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 4 இலட்சத்திற்கான கல்வி உதவித்தொகை

பதிவு:2022-10-19 08:41:47



திருவள்ளூரில் 15 முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 4 இலட்சத்திற்கான கல்வி உதவித்தொகைக்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூரில் 15 முன்னாள்  படைவீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 4 இலட்சத்திற்கான கல்வி உதவித்தொகை

திருவள்ளூர் அக் 18 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் சார்ந்தோர் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், இச்சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 4 லட்சத்திற்கான கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

இதில் முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் ஜி.ராஜேஷ்வரி, முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர்,சார்ந்தோர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்