கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா

பதிவு:2022-10-19 08:51:09



கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா

கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா

திருவள்ளூர் அக் 18 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது.மகளிர் திட்ட இயக்குநர் மல்லிகா தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார்.

இந்த இளைஞர் திறன் பயிற்சியில் திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 35 வரையிலான ஆண்,பெண் இருபாலாருக்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,பிரதமமந்திரி கௌசல் விகாஸ் யோஜனா,மாவட்ட தொழில் மையம்,தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற பல்வேறு திட்டங்களில் அரசு துறைகளின் கீழ் தையல் பயிற்சி,அழகு நிலையம்,மின் தூக்கி இயக்குபவர்,மருத்துவ உதவியாளர் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை அளிக்கப்படும்.மேலும் பயிற்சியின் போது மூன்றில் ஒரு பங்கு பயிற்சி காலத்தில் பணியிடைப் பயிற்சியுடன்,மென் திறன் பயிற்சியும்,ஆங்கில அறிவு,கணினி பயன்பாடு,இன்டர்நெட் உபயோகம், ஆளுமை திறன் மேம்பாடு,மென்திறன் ஆகிய கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், மகளிர் திட்ட உதவி மற்றும் திட்ட அலுவலர் வீரமணி, கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம்,சந்திரசேகர், கடம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், கடம்பத்தூர் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் கலைமணி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட தொழில் மையம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர், உதவி இயக்குனர் உட்பட 225 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.