திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

பதிவு:2022-10-19 08:54:31



திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

திருவள்ளூர் அக் 18 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா தலைமையில் நடைபெற்றது.நகர செயலாளர் ஜி கந்தசாமி ஒன்றிய செயலாளர்கள் எம் சுதாகர் எஸ் மாதவன் சக்திவேல், டி.சௌந்தர்ராஜன் ஏ ரவி டி.டி சீனிவாசன் கோ குமார் ஏ.ஜி ரவிச்சந்திரன் பி .ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நிர்வாகிகள் விஆர் ராம்குமார், கேபிஎம் எழிலரசன் எஸ் ஏ நேசன், வினோத் குமார் ஜெயின் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.இதில் முன்னாள் அமைச்சர் பா. பெ பெஞ்சமின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே வேணுகோபால், அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.ஹரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் வக்ஃபு வாரிய தலைவரும், அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான தமிழ் மகன் முஸ்லீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பேரறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்னார்.பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மட்டும்தான் தகுதி இருக்கிறது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்க ஆலோசனை கேட்டபோது நான் எனது கைவிரலில் குண்டு ஊசியை எடுத்து குத்தி எனது கைவிரலில் உள்ள ரத்தத்தால் நான் கையெழுத்திட்டேன் என்றும் இப்படித்தான் எனக்கும் எம்ஜிஆர் க்கும் உள்ள நெருக்கம் என்றும் எம்.ஜி.ஆர் நெஞ்சிலே அண்ணா குடியிருந்ததால் தான் கட்சி ஆரம்பிக்கும் பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அண்ணா பெயரையும் சூட்டினார்.

பிறகு கட்சிக்கொடிக்கு அவருடைய திரு உருவத்தையே கொடியில் கொண்டு வந்தார் புரட்சித்தலைவர் எந்த ஒரு திரைப்படத்திலும் எந்த ஒரு வசனத்திலும் நடித்தாலும் அதில் அண்ணாவை முன்னிறுத்தியே அவரது வழியிலே பயணிப்பார். ஆகையால் தான் பேரறிஞர் அண்ணா உடைய பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தகுதியும் தார்மீக பொறுப்பும் உள்ளது என்றும் எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்தினார். நாங்கள் எப்போதும் பொதுமக்களுக்காக உழைத்துக் கொண்டே தான் இருப்போம் எனவும் தெரிவித்தார்.பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு வந்த மூன்றெழுத்து தான் எம்.ஜி.ஆர், எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இந்த பெரிய கழகத்தை கட்டி காப்பது யார் என்று சூழ்நிலை வந்த போது அப்போது வந்த மூன்று எழுத்து அம்மா.(ஜெயலலிதா) அவருடைய மறைவுக்குப் பின்னால் இயக்கம் எங்கு போய் நிற்குமா என்ற ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தான் உழவர் தேசத்து தென்றல் காற்றாக வெளிவந்த இ.பி.எஸ். என்ற மூன்று எழுத்து‌ என‌ அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நகர பேரூர் கழக அதிமுக அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.