2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள தர்காவில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பி வி ரமணா ஆகியோ சிறப்பு பிரார்த்தனை

பதிவு:2022-10-19 09:02:26

திருவள்ளூர் அக் 18 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி 50 ஆண்டுகள் முடிவடைந்து தற்போது 51 ஆம் ஆண்டை தொடங்குகிறது. இதை ஒட்டி தொடக்க விழாவாக அதிமுகவினர் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூர் முகமது அலி தெருவில் அமைந்துள்ள ஷாபித் கலந்தர் தர்காவில் முன்னாள் வக்பு வாரிய தலைவரும் அதிமுக அவைத் தலைவருமான தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா ஆகியோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பிரார்த்தனையின் போது வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற வேண்டும் எனவும் அந்த தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரார்த்தனை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் தர்கா பகுதி கிளைச் செயலாளர் பிரகாஷ் மற்றும் அதிமுக நகரச் செயலாளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன், எழில் துக்காராம், ராமதாஸ், எம் ஆர் சி பிரபாகரன், ரிஸ்வான் மகளிர் அணி நிர்வாகி ஷர்மிளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.