பதிவு:2022-10-19 14:37:22
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் “லிட்ட ரீனா” என்ற தலைப்பில் ஆங்கில இலக்கிய விழா
திருவள்ளூர் அக் 19 : திருவள்ளுர் வேடங்கி நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் “லிட்ட ரீனா” என்ற தலைப்பில் ஆங்கில இலக்கிய விழா நடைபெற்றது.பள்ளியின் இயக்குநர்கள் அருளரசு,பரணிதரண் ஆகியோர் தலைமை தாங்கினர்.பள்ளியின் முதல்வர் எம்.கே.கிரிஜா மற்றும் துணை முதல்வர் ஹேமலதா கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் விஷ்ணுசரண் குத்து விளக்கேற்றி சிறப்பித்தார்.
விழாவினை தன்னுணர்வு மேலாண்மை நிபுணர் ஹிக்னோடிஸ் குரியகோஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.மேலும் பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மாலினி சேசாத்திரி கலந்துக் கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் மாணவர்களின் தனித்துவ திறனை வெளிக்கொணரும் பலவித போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு 500 க்கும் அதிகமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு எவ்வாறு தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்தனர்.அதில் மனதை மயக்கும் நகைச்சுவை போட்டி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. அப்பொழுது அனைத்து மாணவர்களும் தன் திறமைகளை வளர்ப்பதில் கவனம் கொள்வோம் என்று உறுதி பூண்டனர்.
இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவியர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்