வட கிழக்கு பருவமழை 2022 முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்

பதிவு:2022-10-19 15:00:09



வட கிழக்கு பருவமழை 2022 முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்

வட கிழக்கு பருவமழை 2022 முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர் அக் 19 : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருவள்ளூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி தலைமை தாங்கினார். நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் சேகர், வட்டாட்சியர் எஸ்.மதியழகன், திருவள்ளூர் ஏ.எஸ்.பி. விவேகானந்தா சுக்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தீயணைப்புத்துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதார துறை அதிகாரிகள், திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் 90 கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் 9 பேர், மண்டல துணை வட்டாட்சியர் 3 பேர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஒருவர் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 50 முன்களப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். காந்திகிராமம், நாராயணபுரம், காக்களூர் சக்தி நகர், பட்டரைப் பெரும்புதூர், பிஞ்சிவாக்கம், வெங்கத்தூர், எம்.ஜி.ஆர்.நகர், நத்தம்பேடு உள்ளிட்ட 13 கிராமங்கள் மழை காலங்களில் வெள்ளம் சூழும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக சார் ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.

மேலும், மழை நீர் ஊருக்குள் புகாதவாறு தடுத்திட எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஜேசிபி இயந்திரங்கள், மின் மோட்டார்கள், ஜெனரேட்டர் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.திருவள்ளூர் வட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தயார் நிலையில் இருப்பதாக சார் ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.

திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து 044 27660254 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும்தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்காலம் என வட்டாட்சியர் என். மதியழகன் தெரிவித்துள்ளார்.