பதிவு:2022-10-19 15:14:13
பூவிருந்தவல்லி அடுத்த நேமத்தில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டி.எஸ்.செல்வ விநாயகம் ஆய்வு
திருவள்ளூர் அக் 19 : தமிழகத்தில் சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடுகள் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மருந்து மாத்திரை இருப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.தற்போது வரும் முன் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஆகியவை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் பொது மக்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தரமானதாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று பூவிருந்தவல்லி அடுத்த நேமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளவு மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் டி.எஸ். செல்வவிநாயகம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வட்டார அரசு மருத்துவமனையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் உள்ள மருந்து கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். எந்த வகையான மருந்து மாத்திரைகள் அதிகளவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. எந்த வகையான மருந்து மாத்திரைகள் அதிகளவில் தேவைப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மருந்துகள் இருப்பு குறித்த பதிவேடுகளையும் சரி பார்த்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொது மருத்துவதுறை இயக்குனர் டி.எஸ்.செல்வ விநாயகம், தமிழகத்தில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடாக இருப்பதாக வந்த தகவலையடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள வட்டார மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்து மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் தரமானதாக தருவதை உறுதி செய்கிறோம். அதனை வாங்குவதற்கான தொகை இருக்கிறதா என்பதை உறுதி செய்கிறோம்ஆரம்ப சுகாதார நிலையங்களில் என்னென்ன மருந்து மாத்திரைகள் தேவையோ, அது இருக்கிறதா என்பதை உறுதி செய்வதை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வருவதாகவும் தெரிவத்தார்.
தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மாநில பட்ஜெட்டில் ரூ.57.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் 55.9 கோடியும், அவசரத் தேவைக்கு துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மூலம் ரூ.2 கோடிக்கு மருந்து மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.தமிழக சுகாதார துறைக்கு தேசிய மருத்துவ கழகம் 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்தும், தேவை குறித்தும் விளக்கமாக தெரிவிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 5 பாஸ் புத்தகமும், வட்டார சுகாதார நிலையத்திற்கு 10 பாஸ் புக்கும், மற்றும் துணை இயக்குனர் க்கு என 26 பாஸ் புக் என மொத்தம் 41 வகையான பாஸ்புக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தேவைப்படும் மருந்து மாத்திரைகளை வாங்கி கொள்ளாலம். ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும், அவசர சிகி்ச்சைக்கு என்ன இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு என்ன இருக்கிறது. வருமுன் காப்போம் திட்டத்திற்கு எவ்வளவு இருக்கிறது, மக்களைத் தேடி மருத்துவத்திற்கு எவ்வளவு மருந்து மாத்திரைகள் இருக்கிறது என்பதை கண்காணித்து வருகிறோம்.
351 மருந்து வகைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. அனைத்து அனைத்து மருத்துவனைகளிலும் இருப்பதை உறுதி செய்யப்படும். இதில் 42 வகையான நுண்ணியிர் கொல்லி மாத்திரைகள் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. அதில் 5 முதல் 10 மாத்திரைகள் மட்டுமே நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.தமிழகத்தில் தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு போதிய மருந்து, மாத்திரை கையிருப்பு உள்ளதா, உயர் இரத்த அழுத்த நோய்க்கு 13 வகையான மாத்திரைகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தாதகவும் தெரிவித்தார்.
நேமம் மருத்துவமனையில் 89 ஆயிரம் ரூபாய்க்கான மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது. அதே போல் தற்போது அடிக்கடி பாம்பு கடித்து உயிரிழக்கும் நிலை இருப்பதால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் அதற்கான மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், முதல் சிகிச்சை முடிந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், மழை வெள்ளத்தால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை சீர் செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க அனைத்து விதமான மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பாதகவும் பொது சுகாதார துறை இயக்குனர் டி.எஸ். செல்வ விநாயகம் செய்தியாளரகளிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் ஜவஹர்லால், செந்தில்குமார், பூந்தமல்லி வட்டார மருத்துவர் பிரதீபா நேமம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெண்மதி,.சுகாதார அலுவலர்கள் வடிவேல், விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்