திருத்தணியில் குடிபோதையில் நண்பர்களுக்கிடையே மோதல் : பீர் பாட்டிலை உடைத்து குத்தியவர் தப்பியோட்டம் : படுகாயம் அடைந்தவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதி

பதிவு:2022-10-19 16:16:21

திருவள்ளூர் அக் 19 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் (30) மற்றும் பாண்டியன்(29) ஆகிய இருவரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சண்முகம் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது சண்முகம் மனைவி குறித்து தவறாக ஏதோ பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறின் போது, பாண்டியன் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து சண்முகத்தை சரமாரியாக குத்தியவர் அங்கிருந்து தலைமறைவானார்.

இதில் படுகாயம் அடைந்த சண்முகத்தை மீட்ட போலீசார் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளி்த்து வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலை உடைத்து நண்பனை குத்திய சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.