திருவள்ளூரில் வசந்தம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சர்வதேச பராமரிப்பாளர் தினவிழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சான்றிதழ்,கேடயம் வழங்கினார்

பதிவு:2022-10-20 09:48:01



திருவள்ளூரில் வசந்தம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சர்வதேச பராமரிப்பாளர் தினவிழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சான்றிதழ்,கேடயம் வழங்கினார்

திருவள்ளூரில் வசந்தம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சர்வதேச பராமரிப்பாளர் தினவிழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சான்றிதழ்,கேடயம் வழங்கினார்

திருவள்ளூர் அக் 20 : திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வசந்தம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் சர்வதேச பராமரிப்பாளர் தினவிழா மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அந்தக் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் வி.ஜெயச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் பி.ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் வசந்தம் கூட்டமைப்பு சார்பில் 5 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் அளித்தனர். அதன்படி உயர் ஆதரவு தேவைப்படும் பராமரிப்பாளர்களுக்கான உதவித் தொகை வழங்கிட ஆவண செய்ய வேண்டும், மன நல மாத்திரைகள் மாவட்ட பொது மருத்துவமனையில் மட்டுமே கிடைக்கின்ற நிலையை மாற்றி அனைத்துவகை மனநல மாத்திரைகளும், வட்டார, ஒன்றிய, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் கிடைக்க வழி செய்ய வேண்டும், மன நலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றித்திரியும் மன நோயாளிகளை துரிதமாக மீட்டெடுத்து அவர்களின் மறுவாழ்வு, மருத்துவ வசதி மற்றும் தங்குமிட வசதகளை வழங்கிட வேண்டும், மன நல சட்டம் பற்றிய விழிப்புணர்வை கிராம ஊராட்சி, ஒன்றிய, வட்டார அரசு துறை அதிகாரிகளுக்கு வழங்கும் பயிற்சி பட்டறைகளை தொடர்ந்து நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்றுகோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவி புரிந்து வருகிறது. இந்த அமைப்பு சார்பில் சர்வதேச பராமரிப்பாளர்களுக்கான தினவிழா மூலம் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளதை வரவேற்கிறேன். இதன் மூலம் மனநலம் பாதித்த, மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பவர்களின் சிரமங்களையும் அறிந்து கொள்ள முடியும்.இதை உணர்ந்துதான் கடந்த மாதம் அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டது.

இம்மாவட்டத்தில் முதன், முதலாக மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பாளர்களுக்கான உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.மாநில அளவில் இந்த மாவட்டத்தில் தான் பராமரிப்பாளர்களுக்கான உதவித் தொகை அதிகபட்சமாக 284 பேருக்கு வழங்குவதாகவும், அதோபோல் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சிறந்த பராமரிப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 15 பேருக்கு மாத உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, இணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) எஸ்.செல்வக்குமார், வட்டாட்சியர் என்.மதியழகன், வசந்தம் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ஏ.லிவிங்ஸ்டன், கேரர்ஸ் அமைப்பின் திட்ட இயக்குநர் பெங்களூரு என்.கே.நடேசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வசந்தம் கூட்டமைப்பின் பணியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.