திருவள்ளூரில் முதலாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பாட்டத்துடன் பேரணி :

பதிவு:2022-04-08 11:13:06



திருவள்ளூரில் முதலாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பாட்டத்துடன் பேரணி :

திருவள்ளூரில் முதலாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பாட்டத்துடன் பேரணி :

திருவள்ளூர் ஏப் 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் முதலாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் இந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி ஏழாவது நாளான நேற்று திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் மீரா திரையரங்கம் அருகில் இருந்து மாணவ மாணவிகளின் சிலம்பாட்டத்துடன் பேரணியாக புறப்பட்டு புத்தகத் திருவிழா நடைபெறும் மையத்திற்கு வருகை தந்து கண்காட்சியை பார்வையிட்டதோடு தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி மகிழ்ந்தனர்.

அதே போல் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவ மாணவிகளும் அனைத்து விதமாகன புத்தகங்களையும் ஆர்வமுடன் பார்வையிட்டு வாங்கி சென்றனர். புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட பெரும்பாலான மாணவ மாணவிகள் ஐ லவ் புக் ஃபேர் என்று ஆர்வத்துடன் கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் இங்கு புத்தகங்களை வைத்திருப்பதால் அனைவருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும், புத்தகங்களை பார்க்க பார்க்க ஆர்வம் அதிகமாவதாகவும், அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ள இந்த புத்தகக் கண்காட்சியை அடிக்கடி நடத்திட வேண்டும் என்றும் மாணவிகள் ஆர்வம் தெரிவித்தனர்.