திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்கம்

பதிவு:2022-10-27 13:02:06



திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர் அக் 27 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சில்ட்ரன் பிலீவ் தொண்டு நிறுவனம் சார்பாக பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சமூக நலத்துறை அலுவலர் எஸ்.கே. லலிதா, சில்ட்ரன் பிலீவ்-ன் இந்திய இயக்குனர் நான்சி.ஜெ. அனபெல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குனர் பி.ஸ்டீபன் அனைவரையும் வரவேற்றார். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்கும் நோக்கத்துடன் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளாக பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக அரசுத்துறைகளுடனும், தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து பணி செய்து வருகின்றது. இக்கருத்தரங்கத்திற்கு வருகை புரிந்துள்ள அனைவரும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து முழுமையான புரிதலோடு செயல்பட்டு, வருங்காலங்களில் குழந்தை திருமணமே நடைபெறாத மாவட்டமாக நமது மாவட்டம் இருக்க முழு ஒத்துழைப்போடும், விழிப்புணர்வோடும் செயல்பட வேண்டியது நம் கடமையாகும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவதாகவும், ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கு 3-வது பிரசவம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மத ரீதியிலான தலைவர்கள் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், குழந்தை திருமணம் தொடர்பான புகாரை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிப்பவர் விவரம் பாதுகாக்கப்படும் என்றும் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சில்ட்ரன் பிலீவ்-ன் இந்திய இயக்குனர் நான்சி.ஜெ. அனபெல் பேசும் போது, கடந்த 10 ஆண்டுகளில் 2 கோடி குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சராசரியாக 1.078 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது. கடந்த 2020-21-ல் கொரோனா காலத்தில் 1 கோடியே 40 லட்சம் குழந்தை திருமணங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றிருக்கிறது. கடந்த மே முதல் அக்டோபர் வரை 1500 குழந்தை திருமணங்கள் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி மூத்த உரிமையியல் நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சாண்டில்யன், சில்ட்ரன் பிலிவ் தொண்டு நிறுவன இயக்குனர் நான்சி ஜே அனாபெல், ஐ.ஆர்.சி.டி.எஸ். இயக்குனர் ஸ்டீபன், பஞ்சாயத்து தலைவர்கள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.