திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா : சாமி தரிசனம் செய்ய வந்த மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம்

பதிவு:2022-10-27 13:11:25

திருவள்ளூர் அக் 27 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் நேற்று கந்த சஷ்டி விழா துவங்கி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாளில் இருந்து 6 நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது.

காலை மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை காவடி மண்டபத்தில், உற்சவருக்கு லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது. இந்த கந்த சஷ்டி விழாவில் முருகனை தரிசிக்க திருவள்ளூர் மாவட்டம் மட்டுல்லாது, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இலவச தரிசனம் மற்றும 100 ரூபாய் கட்டணம் ஆகியவற்றில் மட்டுமே சென்று பக்தர்கள் முருகனை தரிசிக்க வேண்டிய ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால் முக்கியஸ்தர்கள் தரிசனம் முற்றிலும் ரத்து செய்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் மாற்றுத் திறனாளிகளை முக்கியஸ்தர்கள் செல்லும் பாதையில் சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர். ஆனால் தற்போது அந்த முக்கியஸ்தர்கள் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் மாற்றுத் திறனாளிகள் முருகனை தரிசிக்க செல்ல முடியாமல் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.